Skimmer கருவி மூலம் உங்கள் ATM கார்டு தகவல்கள், பணம் திருடப்படலாம்

நாம் அனைவரும் பணம் சம்பாதிக்கவும் அதை சேமித்து வைக்கவும் பல்வேறு இன்னல்களையும் சந்தித்து வருகிறோம். பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி வங்கி கணக்கில் சேமித்து வைக்கிறோம், தேவைபடும் நேரங்களில் இப்போது அனைவரும் ATM இயந்திரங்களை பயன்படுத்தி பணம் எடுக்கிறோம். ATM இயந்திரங்களில் எத்தனையோ பாதுகாப்பு அம்சங்கள் இருந்தபோதிலும் எதாவது ஒரு பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி பல கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. ATM கொள்ளைகளில் ஈடுபடுவோர் பயன்படுத்தும் தொழில்நுட்பம்தான் இந்த ஸ்கிம்மர் (Skimmer ) கருவி

ஸ்கிம்மர் கருவி என்றால் என்ன ?

Skimmer Device, Fake ATM Keypad, Pin hole camera

அனைத்து ATM கார்டுகளிலும் நமது வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள் மற்றும் வங்கி சர்வரை (Server ) தொடர்புகொள்ள தேவையான தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். ATM கார்டு பின்புறம் உள்ள கருப்பு பட்டை (Magnetic Tape). இந்த தகவல்கள் கொண்டுதான் ATM இயந்திரம் நமது வங்கி சர்வரை (Server ) தொடர்புகொண்டு நமது பண பரிவர்த்தனையை சரிபார்க்கும்.

ATM இயந்திரத்தில் கார்டு செலுத்தும் பொது அதில் ஸ்கிம்மர் கருவி பொறுத்தப்பட்டிருந்தால் நமது ATM தகவல்கள் ஸ்கிம்மர் கருவியில் பதிவாகிவிடும். ATM PIN பதிவிடும்போது pin hole camera மூலமோ அல்லது போலி keypad மூலமோ நமது ATM PIN-ஐ தெரிந்துகொள்வார்கள், இவ்வாறு சேமிக்கப்பட்ட தகவல்களை கொண்டு ஒரு போலி ATM கார்டு செய்ய முடியும். இதன் பிறகு உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பது எளிதுதான்.

ஸ்கிம்மர் மற்றும் இதர கருவிகளை பற்றி விரிவாக பார்க்கலாம்

  • ஸ்கிம்மர் கருவி
  • Pin Hole Camera
  • Fake ATM Key Pad

ஸ்கிம்மர் கருவி

ATM இயந்திரத்தில் கார்டு செலுத்தும் பகுதி மேல் அதே போன்ற வடிவம் உள்ள ஒரு கருவியை பொருத்தி விடுவார்கள். இந்த கருவி ATM கார்டில் உள்ள தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும். ஸ்கிம்மர் கருவியில் உள்ள தகவல்களை எடுப்பதற்கு மீண்டும் ATM மையத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை. இன்று உள்ள wifi தொழில்நுட்பம் கொண்டு இந்த தகவல்களை இருக்கும் இடத்திலிருந்தே பெறமுடியும்

இப்போது உங்கள் ATM கார்டு தகவல்கள் திருடப்பட்டுவிட்டது இதை கொண்டு ஒரு போலி ATM கார்டு செய்துகொள்ளலாம் ஆனால் பணம் எடுப்பதற்கு PIN வேண்டும். ATM PIN எண்ணை எவ்வாறு தெரிந்துகொள்வார்கள் ?

Pin Hole Camera in ATM

 ATM Pin hole camera

கேமராக்கள் பல்வேறு வடிவம் மற்றும் அளவுகளில் கிடைக்கின்றன அவற்றில் ஒன்று தன இந்த PIN Hole கேமரா. மேலே உள்ள படத்தை பாருங்கள் ATM இயந்திரத்தின் மேல்புறம் ஒரு சிறிய துளை உள்ளதை கவனியுங்கள். இதுதான் PIN Hole கேமரா, இந்த PIN Hole கேமரா ATM இயந்திரத்தில் எந்த பகுதியிலும் பொருத்தப்படலாம். இதன் மூலம் நீங்கள் பயன்படுத்தும் PIN எண்ணை தெரிந்து கொள்வார்கள்

PIN எண்ணை உள்ளிடும் பொது கை வைத்து மறைத்துக்கொள்ளலாமா? இதனால் உங்கள் PIN எண் பாதுகாக்கப்படுமா ?

நிச்சயம் இல்லை. நீங்கள் கேமராவை மறைத்தாலும் உங்கள் PIN என்னை திருட இரண்டு வழி உள்ளது. ஒரு வழி இப்போது பார்க்கலாம், இன்னொரு வழியை பற்றி தனியாக பதிவிடுகிறேன்

Fake ATM Key Pad

ATM Fake Keypad

PIN எண்ணை உள்ளிடும் பொது கை வைத்து மறைத்துகொண்டாலும் ATM இயந்திரத்தில் போலி keypad இருந்தால் நீங்கள் உள்ளிடும் PIN பதிவுசெய்யப்படும் . மேலே உள்ள படத்தில் உள்ளது போல ATM இயந்திரத்தில் போலியான keypad பொறுத்த முடியும்

ஸ்கிம்மர் கருவியை எப்படி கண்டுபிடிப்பது

ATM-இல் பயன்படுத்தபடும் ஸ்கிம்மர் கருவிகளை எப்படி கண்டுபிடிப்பது மற்றும் உங்கள் வங்கி கணக்கை எப்படி பாதுகாப்பது என்பதை இப்போது பார்க்கலாம்

Identify ATM Skimmer device

ஸ்கிம்மர் கருவியை கண்டுபிடிப்பது மிகவும் எளிதான ஒன்றுதான். நீங்கள் ATM இயந்திரத்தை ஒரு நிமிடம் நன்கு கவனித்தாலே போதும் ஸ்கிம்மர் கருவியை கண்டுபிடித்துவிடலாம்.மேலே உள்ள படத்தை பாருங்கள்

  1. அம்புக்குறி முழுமையாக தெரியவில்லை
  2. கார்டு செலுத்தும் துளையின் மேல் பகுதி சரியாக பொருந்தவில்லை
  3. ஸ்கிம்மர் கருவி பொருத்துவதற்கு பசை பயன்படுத்தபட்டுள்ளது

இது தவிர வேறு எப்படி ஸ்கிம்மர் கருவி இருப்பதை தெரிந்து கொள்வது

ATM ஸ்கிம்மர் கருவியிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது

  1. கார்டு செலுத்தும் பகுதியை லேசாக (ATM இயந்திரம் சேதமடையாமல் ) இழுத்து பாருங்கள். இது சரியான வழி இல்லை இருந்தாலும் வேறு வழி இல்லை.
  2. கார்டு செலுத்தும் பகுதியில் விளக்கு சரியாக ஒளிர்கிறதா என்று கவனியுங்கள்
  3. ATM கார்டு உள் செலுத்தும்போது எதாவது இடர்பாடு தென்பட்டால் உங்கள் கார்டை எடுத்துவிடுங்கள். சாதாரணமாக கார்டு செலுத்துவதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது. நிச்சயம் ATM அறையில் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் இருக்கும். உங்கள் புகாரை மறக்காமல் பதிவு செய்யுங்கள் இது அடுத்தவரை பாதுகாக்கும்
  4. keypad-இல் type செய்யும்பொது keys ஆடவோ அல்லது மிக கடினமாகவோ தென்பட்டால் சுதாரித்துக்கொள்ளுங்கள்
  5. EMV chip உள்ள ATM card பயன்படுத்துங்கள்.

EMV Chip ATM Card

EMV Chip ATM Card

EMV chip உள்ள ATM card ஸ்கிம்மர் கருவியிலிருந்து உங்களை பாதுகாக்கும். உங்கள் ATM கார்டில் EMV Chip இல்லை எனில் உங்கள் வங்கியை தொடர்புக்கொண்டு உடனே EMV chip உள்ள ATM card வாங்குங்கள்.

நீங்கள் EMV chip உள்ள ATM card பயன்பதினாலும் நீங்கள் பயன்படுத்தும் ATM அல்லது POS இயந்திரம் EMV chip ATM கார்டு பயன்படுத்த உகந்ததாக இருக்கவேண்டும். EMV chip ATM கார்டு எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி தனியாக பதிவிடுகிறேன். இப்போது ATM அல்லது POS இயந்திரம் EMV chip ATM கார்டு பயன்படுத்த உகந்ததாக என எப்படி தெரிந்துகொள்வது ?

நீங்க பயன்படுத்தும் ATM அல்லது POS இயந்திரத்தில் பரிவர்தனையின் பொது ATM card செலுத்தப்பட்ட நிலையிலுள்ள இயந்திரம் புது வகை EMV கார்டு பயன்படுத்த உகந்தது. விவரங்கள் விரைவில் பதிவிடுகிறேன்

NFC (RFID) ATM Card

NFC RFID ATM Card

இப்போது POS இயந்திரத்தின் பக்கத்தில் கொண்டுசென்றலே உங்கள் கார்டில் இருந்து pin இல்லாமல் 2000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யமுடியும். இந்த வகை ATM கார்டுகளுக்கு NFC ATM கார்டு என்று பெயர். இந்த NFC (RFID ) ATM கார்டு எவ்வாறு செயல்படுகிறது இதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் என்ன ? விரைவில் சந்திப்போம் , எங்கள் சமூக வலைதள பக்கங்களில் இணைந்திருங்கள்


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. What is SIM swap fraud in Tamizh
  2. Skimmer கருவி மூலம் உங்கள் ATM கார்டு தகவல்கள், பணம் திருடப்படலாம்

Be the first to comment

Leave a Reply