Spoken English in Tamil – Introduction
ஆங்கிலம் பேச நம் அனைவருக்கும் விருப்பம் இருக்கும் ஆனால் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நமக்கு உடனே ஒரு பதட்டமும், பயமும் வந்துவிடும். ஏன் இந்த பயமும் பதட்டமும்?
நாம் பேசும் போது எதாவது தவறாக பேசிவிடுவோமா என்ற பயம். நாம் தவறாக பேசிவிட்டால் அடுத்தவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள். நாம் தவறாக பேசியதை வைத்து கேலி செய்வார்கள் என்ற பயம்.
சில பேருக்கு அடுத்தவர்கள் ஆங்கிலத்தில் பேசினால் புரிந்துகொள்ளும் அளவிற்கு ஆங்கில அறிவு இருக்கும், ஆனால் இவர்களுக்கும் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் உடனே பயம் வந்துவிடும். இந்த நிலைமை பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு நன்கு பொருந்தும்.
நீங்கள் உண்மையிலேயே ஆங்கிலம் பேச விரும்பினால் நீங்கள் ஆங்கிலம் பேச விரும்பினால் இந்த பயத்திலிருந்து முதலில் நீங்கள் வெளியே வரவேண்டும். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த அல்லது தெரியாத ஒரு உண்மையை சொல்கிறேன். நம்மில் பலருக்கு அடுத்தவர்கள் செய்யும் விசயங்களில் குறை காண்பதும் அதை வைத்து கேலி செய்வதும் இயல்பாகவே சிறப்பாக செய்வோம் (செய்வார்கள் ), ஆனால் அதே விசயத்தை நம்மை செய்ய சொன்னால் நாம் இன்னும் மோசமாக செயல்படுவோம். திரும்ப சொல்கிறேன் நீங்கள் உண்மையிலேயே ஆங்கிலம் பேச விரும்பினால் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என கவலைகொள்வதை நிறுத்துங்கள்.
ஆங்கிலம் பேச அடிப்படை
- ஆங்கிலம் பேச முதல் அடிப்படையான விஷயம் பேசவேண்டும், தவறுகளை பற்றி கவலைபடாமல் பேசவேண்டும். நீங்கள் பேச ஆரம்பித்துவிட்டாலே உங்களுக்குள் இருக்கும் பயம் குறைய ஆரம்பித்துக்கிடும். நாளடைவில் உங்கள் பயம் முற்றிலும் நீங்கிவிடும்
- அடுத்து நாம் பேசும்பொது ஏற்படும் தவறுகளை சரிசெய்துகொள்ளவேண்டும். அதற்கு முதலில் சில அடிப்படை இலக்கணம்(Grammar ) தெரிந்துகொள்ளவேண்டும்.
- நீங்கள் பேசினால் மட்டும் போதாது அடுத்தவர்கள் பேசுவதும் உங்களுக்கு புரியவேண்டும் அதற்கு உங்கள் கேட்டு புரிந்துகொள்ளும் திறனை (Listening Skills ) வளர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளை பாருங்கள். நம் அனைவருக்குக்கும் கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இருக்கிறது அதில் வரும் ஆங்கில வர்ணனையை கவனியுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் எவ்வாறு வார்த்தைகள் பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
- அடுத்து நிறைய ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தங்களை தெரிந்துகொள்ளவேண்டும் மற்றும் அந்த வார்த்தைகளை வைத்து எப்படி வாக்கியம் அமைப்பது மற்றும் பேசுவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
என்ன செய்யவேண்டும் ?
- உங்களை போல ஆங்கிலம் பேச ஆர்வம் உள்ளவர்களை கொண்டு ஒரு சிறு குழு உருவாக்குங்கள்.
- உங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளுங்கள். தவறுகளை பற்றி கவலை படாதீர்கள். கேலி கிண்டல் செய்வதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். முதலில் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்தாவது பேசுங்கள்
- நீங்கள் பேசும் தமிழ் வார்த்தைகள் மற்றும் பேசும் போது தடுமாறும் இடங்களை கண்டுபிடித்து சரிசெய்யுங்கள். உங்கள் மொபைல் கொண்டு உங்கள் உரையாடல்களை பதிவு செய்து கேட்பதின் மூலம் உங்கள் தவறுகளை கண்டுபிடித்து சரிசெய்துகொள்ளலாம்
அடுத்த பதிவில் தன்மை (First Person ) பற்றியும். First person வாக்கியங்களையும் பார்ப்போம்.
எங்கள் YouTube channel-லை(ehowtonow.com) நீங்களும் உங்கள் குழுவில் உள்ள நண்பர்களும் மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் குழுவில் எத்தனை நபர்கள் உள்ளீர்கள், உங்கள் முதல் உரையாடல் பொது எத்தனை தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினார்கள் என்பதை கமெண்ட்(comment )-இல் பதிவுசெய்யுங்கள்.
Ask your questions in eHowToNow Forum
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers
Leave a Reply
You must be logged in to post a comment.