Person
ஒருவர் இருக்கும் இடத்தை பொறுத்து அவரை பற்றி குறிப்பிடுவதை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
- First Person (தன்மை இடம்)
- Second Person (முன்னிலை இடம் )
- Third Person (படர்க்கை இடம் )
இந்த பதிவில் first person (தன்மை இடம்) பற்றியும். first person வாக்கிய அமைப்புகளை பற்றியும் பார்ப்போம். Second person, Third Person பற்றி அடுத்த பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்
First person (தன்மை இடம்)
தன்னை அல்லது தன்னோடு இருப்பவர்களையும் First Person என்போம்.
First Person Singular (தன்மை இடம் – ஒருமை)
தன்னை பற்றி மட்டும் குறிப்பிட நான் (I ), என்னை, எனக்கு (Me) , என்னுடைய (My, Mine ) போன்ற ஒருமை(singular ) வார்த்தைகள் பயன்படுத்துவோம்.
First Person Plural (தன்மை இடம் – பன்மை)
தன்னுடன் இருப்பவர்களையும் சேர்த்து குறிப்பிடும்போது அந்த இடத்தில ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருக்கிறோம். இது போன்ற நேரங்களில் ஒருமை (singular ) வார்த்தைகளை பயன்படுத்த கூடாது. இங்கு பன்மை (Plural) வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை குறிப்பிட நாம், நாங்கள் (We ), எங்களுக்கு, எங்களை (Us), நம்முடைய (Our) போன்ற வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் .
அடுத்து first person வார்த்தைகளை கொண்டு வாக்கியங்கள் எவ்வாறு அமைப்பது என்பதை பற்றி பார்ப்போம். Part of Speech மற்றும் Tense பற்றி தெரிந்துகொண்டபிறகு வாக்கியங்களை அமைப்பது உங்களுக்கு எளிமையாக புரியும். இப்போது சில மாதிரி வாக்கியங்களை மட்டும் பார்ப்போம்
First Person – Singular Sentence
S.No | First person sentences |
1 | I go to school நான் பள்ளிக்குச் செல்கிறேன் |
2 | I am going to school/ I’m going to school நான் பள்ளிக்கு சென்றுகொண்டுள்ளேன் or நான் பள்ளிக்கு செல்கிறேன் |
3 | I went to school நான் பள்ளிக்கு சென்றேன் |
4 | I did not go to school/ I didn’t go to school நான் பள்ளிக்கு செல்லவில்லை |
5 | I will go to school நான் பள்ளிக்கு செல்வேன் |
6 | I won’t go to school நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் |
7 | I’m not going to school நான் பள்ளிக்கு செல்லவில்லை |
8 | I was going to school நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன் |
9 | I wasn’t go to school நான் பள்ளிக்கு செல்லவில்லை |
10 | I will be going to school நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பேன் / நான் பள்ளிக்குச் செல்வேன் |
11 | I won’t be going to school நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்க மாட்டேன் / நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் |
12 | I’m going to play cricket நான் கிரிக்கெட் விளையாடப் போகிறேன் |
13 | I was going to play cricket நான் கிரிக்கெட் விளையாடப் சென்று கொண்டிருந்தேன் |
14 | I can hit a six / I’m able to hit a six என்னால் ஒரு சிக்ஸர் அடிக்க முடியும் / என்னால் ஒரு சிக்ஸர் அடிக்க முடிகிறது |
15 | I can’t hit a six / I’m unable to hit a six என்னால் ஒரு சிக்ஸர் அடிக்க முடியாது / என்னால் ஒரு சிக்ஸர் அடிக்க முடியவில்லை |
16 | I could hit a six என்னால் ஒரு சிக்ஸர் அடிக்க முடிந்தது |
17 | Give me a pen எனக்கு ஒரு பேனா கொடுங்கள் |
18 | It’s my pen இது என் பேனா |
19 | Is this mine? இது என்னுடையதா? |
First Person – Plural Sentence
S.No | First person sentences |
1 | We go to school நாங்கள் பள்ளி செல்கின்றோம் |
2 | We are going to school நாங்கள் பள்ளிக்குச் செல்கிறோம் / நாங்கள் பள்ளிக்குச் சென்றுகொண்டுள்ளோம் |
3 | We went to school நாங்கள் பள்ளிக்குச் சென்றோம் |
4 | We did not go to school/ We didn’t go to school நாங்கள் பள்ளிக்கு செல்லவில்லை |
5 | We will go to school நாங்கள் பள்ளிக்கு செல்வோம் |
6 | We won’t go to school நாங்கள் பள்ளிக்கு செல்ல மாட்டோம் |
7 | We are not going to school நாங்கள் பள்ளிக்கு செல்லவில்லை |
8 | We were going to school நாங்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தோம் |
9 | We weren’t go to school நாங்கள் பள்ளிக்குச் செல்லவில்லை |
10 | We will be going to school நாங்கள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருப்போம் / நாங்கள் பள்ளிக்குச் செல்வோம் |
11 | We won’t be going to school நாங்கள் பள்ளிக்கு செல்ல மாட்டோம் |
12 | We are going to play cricket நாங்கள் கிரிக்கெட் விளையாடப் போகிறோம் |
13 | We were going to play cricket நாங்கள் கிரிக்கெட் விளையாட சென்று கொண்டிருந்தோம் |
14 | We can hit a six / We are able to hit a six நாம் ஒரு சிக்ஸரை அடிக்கலாம்/ எங்களால் ஒரு சிக்ஸர் அடிக்க முடியும் / எங்களால் ஒரு சிக்ஸர் அடிக்க முடிகிறது |
15 | We can’t hit a six / We are unable to hit a six எங்களால் ஒரு சிக்ஸர் அடிக்க முடியாது / எங்களால் ஒரு சிக்ஸர் அடிக்க முடியவில்லை |
16 | We could hit a six நாங்கள் ஒரு சிக்ஸரை அடிக்க முடியும் |
17 | They appreciate us அவர்கள் எங்களை பாராட்டுகிறார்கள்/ அவர்கள் நம்மை பாராட்டுகிறார்கள் |
18 | India is our country இந்தியா எங்கள் நாடு / இந்தியா நம் நாடு |
ஒருமையில் I am என்பது பன்மையில் We are எனவும், I was என்பது பன்மையில் We were எனவும் மாறியிருப்பதை கவனியுங்கள்
Task – 2:
மேல உள்ளது போன்ற first person வாக்கியங்களை (Play, speak, draw, read, travel போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி )கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள். உங்கள் நண்பர்களுடன் பேசி பழகுங்கள். நீங்கள் செய்த தவறுகளை கணக்கெடுத்துவையுங்கள். இந்த தவறுகளின் எண்ணிக்கை நாளடைவில் குறையவேண்டும்.
Next ?
Second Person (முன்னிலை இடம் ) பற்றி அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்
Ask your questions in eHowToNow Forum
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers
Leave a Reply
You must be logged in to post a comment.